HomeNewsKollywood'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

திரு.பாபி பாலச்சந்திரன் அவர்களின் பிடிஜி யுனிவர்சல் நிறுவனத்தின் தயாரிப்பில், விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேஷவ் ஆகியோரது இயக்கத்தில், டி.இமான் அவர்கள் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்’.

இத்திரைப்படத்தில் வைபவ்,அதுல்யா ரவி,மணிகண்டன் ராஜேஷ்,ஆனந்த்ராஜ்,’நான் கடவுள்’ ராஜேந்திரன்,ஜான் விஜய்,ரெடின் கிங்ஸ்லி,சுனில் ரெட்டி,இளவரசு,லிவிங்ஸ்டன்,ஷிஹான் ஹுசைனி,பி.எல்.தேனப்பன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

இத்திரைப்படத்திற்கு டிஜோ டோமி அவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றார். சுரேஷ்.ஏ.பிரசாத் படத்தொகுப்பையும், அருண்சங்கர் துரை கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். சண்டை பயிற்சி இயக்குனராக ‘டான்’ அசோக் பணியாற்ற,நடன இயக்குனராக அஜய் ராஜும் பணியாற்றுகின்றனர். கார்த்திக் நேத்தா மற்றும் கருணாகரன் வரிகளில் பாடல்கள் உருவாகியுள்ளன. தக்ஷா தயாள் ஆடை வடிவமைப்பாளராகவும்,சுதர்சன் விளம்பர வடிவமைப்பாளராகவும்,வேணுகோபால் தயாரிப்பு நிர்வாகியாகவும், மற்றும் தயாரிப்பு மேற்பார்வையாளராக மணிகண்டனும் பணியாற்றுகின்றனர்.திரு. மனோஜ் பினோ தயாரிப்பு நிறுவனத்தின் வியூக தலைமையாளராக பணியாற்றுகிறார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று இன்றுடன் நிறைவுற்றது.மேலதிக அதிகாரப்பூர்வ தகவல்கள் தயாரிப்பு நிறுவனத்தின் சமூக வலைதளங்கள் வழியாக வெளியிடப்படும்.கூடிய விரைவில் திரைப்படம் வெளியாக உள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments