Home Gallery Celebrities ‘தி கோட்’ திரைப்படத்தின் பாடல் நாளை வெளியாகிறது!

‘தி கோட்’ திரைப்படத்தின் பாடல் நாளை வெளியாகிறது!

‘விஜய்’ நடிக்கும் 68 – வது திரைப்படத்தை ‘வெங்கட் பிரபு’ இயக்குகிறார்.’ஏ.ஜி.எஸ்’ நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. ‘யுவன் சங்கர் ராஜா’ இசை அமைக்கிறார். இதில் ‘விஜய்’ இரண்டு வேடங்களில் நடித்துள்ளார் இத்திரைப்படத்தின் படபிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவங்கப்பட்டது தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இதைக் குறித்து இயக்குனர் ‘வெங்கட் பிரபு’ தனது எக்ஸ் பக்கத்தில் நாளை சம்பவம் உறுதி என பதிவிட்டுள்ளார், மற்றும் இத்திரைப்படத்தின் பாடல் ஒன்று நாளை வெளியாவதும் போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ‘மீனாட்சி சவுத்ரி’ நாயகியாக நடிக்கிறார் மற்றும், ‘மோகன்’,’பிரசாந்த்’, ‘பிரபுதேவா’, ‘லைலா’, ‘சினேகா’, ‘ஜெயராம்’ உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த வாரம், இத்திரைப்படம் ‘செப்டம்பர் 5’ – ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.