V4UMEDIA
HomeNewsKollywoodலால் சலாம் டப்பிங்கை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி 

லால் சலாம் டப்பிங்கை முடித்த சூப்பர் ஸ்டார் ரஜினி 

ஜெயிலர் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி மற்றும் அதன் வசூல் தமிழ்   சினிமாவின் அசைக்க முடியாத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.  இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் நடக்க இன்னொரு பக்கம் அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏ,.ஆர் ரகுமான் இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, ரஜினிகாந்த் சற்று நீட்டிக்கப்பட்ட சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை  முடித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.  இதைத் தொடர்ந்து கோவையில் நடைபெற்ற தனது பேரனின் காதுகுத்து வைபவத்தில் கலந்து கொண்டார்  சூப்பர் ஸ்டார்.

அந்த வகையில் இந்த வார இறுதியில் எங்கு பார்த்தாலும் சூப்பர் ஸ்டார் ரஜினியை பற்றிய பேச்சு சோசியல் மீடியாக்களில்  உலா வந்ததை  பார்க்க முடிந்தது. 

Most Popular

Recent Comments