V4UMEDIA
HomeNewsKollywoodலியோ தெலுங்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 

லியோ தெலுங்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் இரண்டாவது முறையாக நடித்து வரும் லியோ படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி  படம் வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழில் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு  அதிகமாகவே உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின்  தெலுங்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று  வெளியாகி உள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்க, பிரியா ஆனந்த், கௌதம் மேனன், அர்ஜூன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்

Most Popular

Recent Comments