நாடெங்கும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் மிகப்பெரிய அளவில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் களை கட்டின. பொதுவாகவே சமீப காலமாக விநாயகர் உருவங்களை குறிப்பிட்ட பிரபலங்களின் கதாபாத்திரங்களோடு, உருவங்களோடு வடிவமைத்து அவற்றை விற்பனைக்கு வைப்பது வாடிக்கையாக உள்ளது.
அது போன்ற தோற்றம் கொண்ட பிள்ளையாரை வாங்குவதற்கு பொதுமக்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் இது போன்ற விநாயகர் சிலைகளை செய்பவர்கள் ட்ரெண்டுக்கு ஏற்றமாதிரி புதிய வடிவங்களில் விநாயகர் சிலைகளை செய்து வருகிறார்கள்.
அந்த வகையில் இந்த விநாயகர் சதுர்த்தியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் அவரது கதாபாத்திர தோற்றங்களை கொண்ட பிள்ளையார் சிலைகளை வடிவமைத்து விற்பனைக்கு வைத்திருந்ததை பல இடங்களில் பார்க்க முடிந்தது.
பொதுமக்களும் குறிப்பாக ரஜினி ரசிகர்கள் இந்த பிள்ளையார் சிலைகளை போட்டி போட்டு வாங்கி சென்றதையும் காணமுடிந்தது.