நடிகை நயன்தாராவை பொருத்தவரை தமிழ் திரையுலகிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகையாக முன்னணி இடத்தில் இருக்கிறார். அவர் திரைப்படங்களை தயாரிக்கும் துறையிலும் இறங்கி நல்ல படங்களையும் தயாரித்து வருகிறார் அதேசமயம் சினிமா தவிர்த்து வேறு எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியாக அவர் இதுவரை கால் பதித்ததில்லை.
இந்த நிலையில் முதன்முறையாக அழகு சாதன பொருட்கள் தயாரிப்புத் துறையில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து கால் பதிக்கிறார் நயன்தாரா. சிங்கப்பூர் தொழிலதிபர் டெய்சி மோர்கன், நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரும் இணைந்து தோல் பராமரிப்பு தொடர்பான அழகு சாதன பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை பிரிவில் தங்களது புதிய தொழிலைத் தொடங்குகிறார்கள்.
‘9 ஸ்கின்’ என பெயரிடப்பட்டிருக்கும் இவர்களது அழகு சாதன பொருட்களின் வணிக முத்திரையை, மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் செப்டம்பர் 29ஆம் தேதியன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடுகிறார்கள். வரும் செப்டம்பர் 29ஆம் தேதியன்று மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் இதன் அறிமுகம் நடைபெறுகிறது.