Home News Kollywood ஜப்பான் படத்தின் டப்பிங்கை துவங்கிய கார்த்தி 

ஜப்பான் படத்தின் டப்பிங்கை துவங்கிய கார்த்தி 

கடந்த வருடம்  விருமன், பொன்னியின் செல்வன், சர்தார்  என ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்தார் நடிகர் கார்த்தி. அதைத்தொடர்ந்து இந்த வருடத்தில் அவரது நடிப்பில் பொன்னியன் செல்வன் 2 படமும் வெளியாகி  வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அடுத்ததாக கார்த்தி நடித்துவரும் ஜப்பான் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. குக்கூ, ஜோக்கர் படங்களின் மூலம்  புகழ்பெற்ற இயக்குனர் ராஜு முருகன் இயக்கும் படம் இது.

இதற்கு முன்னதாக அவர் இயக்கிய இரண்டு படங்களையும்  கலைத்தன்மையோடு உருவாக்கி இருந்தார். ஆனால் தற்போது கார்த்தியின் நடிப்பில் அதுவும் அவர் இரண்டு வேடத்தில் நடிக்கும் படம் என்பதால் இது கமர்சியலாக உருவாகியுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ்  இசையமைக்கிறார்.  இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் தனக்கான காட்சிகளுக்கு நடிகர் கார்த்திக்  டப்பிங் பேசி  வருகிறார்.

புஷ்பா, ஜெயிலர், விருஷபா உள்ளிட்ட படங்களின் மூலம் சமீப காலமாக நாளுக்கு நாள் ரசிகர்களின் வரவேற்பை அதிகமாக பெற்று வரும் தெலுங்கு நகைச்சுவை நடிகர் சுனில் இந்த படத்தில் வில்லனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனு இம்மானுவேல் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.