விஜய் சேதுபதியை வைத்து, சேதுபதி உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் எஸ்.யூ.அருண்குமார். தற்போது நடிகர் சித்தார்த் நடிப்பில் சித்தா என்கிற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் உள்ள சித்தப்பா என்பவரின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது. இதில் ஒரு சிறு குழந்தையின் சித்தப்பா கதாபாத்திரத்தில் சித்தார்த் நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்த சித்தா படத்தில் இடம்பெறும் சித்தப்பா கதாபாத்திரம் குறித்து தனது சொந்த வாழ்க்கையில் தான் பொறுப்பு வகித்த சித்தப்பா ஸ்தானம் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் நடிகர் கமல்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “சித்தப்பாவாக இருப்பது மிகவும் கஷ்டமானது அதேசமயம் மகிழ்ச்சியானதும் கூட. நான் சித்தப்பாக்களிலேயே ஒரு தனித்துவமான சித்தப்பா என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன். காரணம் எனது அண்ணன் மகளுடன் ஒன்றாக சேர்ந்து நான் பள்ளிக்கு சென்று உள்ளேன். இந்த சித்தா படமும் அப்படி ஒரு சித்தப்பாவின் மதிப்பை சொல்லும் படமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.