காமெடி நடிகர், கதையின் நாயகன் என தமிழ் திரையுலகில் வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வருபவர் நடிகர் யோகிபாபு. அதே சமயம் கதையின் நாயகனாக நடிக்கும் படங்களில் கதை மற்றும் அவரது கதாபாத்திரம் வலுவாக இருந்தால் மட்டுமே ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவர் நடித்த பொம்மை நாயகி. கருமேகங்கள் கலைகின்றன ஆகிய படங்கள் அவர் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதையும் வெளிப்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது அறிமுக இயக்குனர் ஜெய் என்பவர் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படம் ஒன்றில் கதையின் நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு.
இந்த படத்தின் பூஜை தென்காசியில் நடைபெற்றதுது. இதைத் தொடர்ந்து அங்கேயே படப்பிடிப்பும் துவங்கியுள்ளது.

காமெடி கலந்த கிராமத்து குடும்ப கதையாக உருவாகும் இந்தப் படத்தை தென்காசி, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளார்களாம்.