விஷால் நடிப்பில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே சூர்யா இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக ரிது வர்மா நடித்த முக்கிய வேடங்களில் சுனில், செல்வராகவன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜி.வி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். விஷால் அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது.
தெலுங்கிலும் விஷாலுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். இளம் முன்னணி நடிகரான நிதின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். இப்படி பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படத்தின் புரமோசனுக்கு உறுதுணையாக இருந்தற்காக நிதினுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் விஷால்.