கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சோனா. குறிப்பாக குசேலன் படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்து இன்னும் அதிக அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். சில படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்திருந்தார்.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/09/sona-1-819x1024.jpg)
இடையில் கொஞ்ச நாட்கள் திரையுலகையை விட்டு ஒதுங்கியிருந்த இவர் தற்போது திடீரென இயக்குனராக மாறியுள்ளார். ஆனால் இவர் இயக்கப்போவது திரைப்படத்தை அல்ல.. வெப் சீரிஸ் ஒன்றைத்தான். அதற்கு ஸ்மோக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/09/sona-2.jpg)
முதலில் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து ஒரு படமாக எடுக்க வேண்டும் என நினைத்திருந்த சோனா, தற்போது அதில் சிறிய மாற்றம் செய்து குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த வெப் சீரிசை இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.