V4UMEDIA
HomeNewsKollywoodஇலங்கைக்கு இசைப்பயணம் செல்லும் சந்தோஷ் நாராயணன் 

இலங்கைக்கு இசைப்பயணம் செல்லும் சந்தோஷ் நாராயணன் 

பா.ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர்  சந்தோஷ் நாராயணன்.  அதைத்தொடர்ந்து தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ் நாராயணனுக்கு என  தமிழகத்தில் மட்டுமல்ல தென்னிந்தியாவில, இதைத் தாண்டி தமிழர்கள் வசிக்கும் பகுதியில் எல்லாம் மிகப்பெரிய அளவிற்கு இசை ரசிகர்கள்  இருக்கின்றனர்.

இந்த நிலையில்  சமீபகாலமாக பிரபல இசையமைப்பாளர்கள் எல்லாம்  உள்ளூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இசை நிகழ்ச்சி நடத்துவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது சந்தோஷ் நாராயணனும் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். ஆனால் இங்கல்ல..  இலங்கையில்..

ஆம்.. தற்போது இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்திற்கு கொண்டாட்டம் தரும் வகையில் யாழ்ப்பாணத்தில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார் சந்தோஷ் நாராயணன். யுத்தத்தின் மூலமும், சமீபகாலமாக பொருளாதாரக் கொந்தளிப்பின் ஊடாகவும் பயணப்படும் அங்குள்ள தமிழ் சமூகத்திற்கு தைரியத்தையும், உறுதியையும் வழங்க வேண்டும் என்ற சந்தோஷின் நீண்டகால ஆசை இப்போது இந்த இசை நிகழ்ச்சி மூலம் நிறைவேற உள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கு ‘சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்ஸ்’ இலவச இசை நிகழ்வாக இருக்கும். பிற வழக்கமான இசை நிகழ்ச்சிகளைப் போல அல்லாமல், ‘சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்’ பல்வேறு தெற்காசிய கலாச்சாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இசைக் கலவை, பிரபலமான பின்னணி பாடகர்கள் முதல் அற்புதமான சுயாதீன கலைஞர்கள் வரை பல்வேறு வகைகளையும் இசைக்கலைஞர்களையும் இந்த நிகழ்சியில் அறிமுகப்படுத்த உள்ளது.

சந்தோஷ் நாராயணனனே இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பதால் இந்த இசை மொழி, கலாச்சாரம் போன்ற எந்தவிதமான தடையும் இல்லாமல் அனைத்து வகையான பார்வையாளர்களிடமும் சென்றடையும் என்பது நிச்சயம்.

யுத்தத்தின் மூலமும், சமீபகாலமாக பொருளாதாரக் கொந்தளிப்பின் ஊடாகவும் பயணப்படும் அங்குள்ள தமிழ் சமூகத்திற்கு தைரியத்தையும், உறுதியையும் வழங்க வேண்டும் என்ற சந்தோஷின் நீண்டகால ஆசை இப்போது இந்த இசை நிகழ்ச்சி மூலம் நிறைவேற உள்ளது.

யாழ்ப்பாண மக்களுக்கு ‘சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்ஸ்’ இலவச இசை நிகழ்வாக இருக்கும். பிற வழக்கமான இசை நிகழ்ச்சிகளைப் போல அல்லாமல், ‘சவுண்ட்ஸ் ஆஃப் தி சவுத்’ பல்வேறு தெற்காசிய கலாச்சாரங்களிலிருந்து எடுக்கப்பட்ட இசைக் கலவை, பிரபலமான பின்னணி பாடகர்கள் முதல் அற்புதமான சுயாதீன கலைஞர்கள் வரை பல்வேறு வகைகளையும் இசைக்கலைஞர்களையும் இந்த நிகழ்சியில் அறிமுகப்படுத்த உள்ளது. சந்தோஷ் நாராயணனனே இந்த நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் இருப்பதால் இந்த இசை மொழி, கலாச்சாரம் போன்ற எந்தவிதமான தடையும் இல்லாமல் அனைத்து வகையான பார்வையாளர்களிடமும் சென்றடையும் என்பது நிச்சயம்.

Most Popular

Recent Comments