V4UMEDIA
HomeNewsKollywoodஜிகர்தண்டா டபுளக்ஸ்  டீசர் வெளியானது 

ஜிகர்தண்டா டபுளக்ஸ்  டீசர் வெளியானது 

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அவரது இரண்டாவது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ஜிகர்தண்டா. இந்த படத்தில் நடித்த  வில்லன் நடிகரான பாபி சிம்ஹாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

இந்த நிலையில் பல வருடங்களுக்கு முன் வெற்றி பெற்ற படங்களில் இரண்டாம் பாகத்தை எடுக்கும் போக்கு தற்போது அதிகமாகி உள்ளது. அந்த வகையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகத்தை ஜிகர்தண்டா டபுளக்ஸ் என்கிற பெயரில்  இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா மற்றும் வில்லனாக எஸ்.ஜே சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, வரும் தீபாவளி பண்டிகை ரிலீஸ் ஆக  வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

இந்த டீசரை பான் இந்தியா நட்சத்திரங்கள் வெளியிட்டு சிறப்பித்துள்ளனர் அதன்படி தமிழில் தனுஷ், தெலுங்கில் மகேஷ் பாபு, மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ரக்ஷித் ஷெட்டி வெளியிட்டனர்.

தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல புதிய மற்றும் சுவாரசியமான இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.  ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

Most Popular

Recent Comments