சூப்பர் ஸ்டார் ரஜினி தென்னிந்திய மற்றும் இந்திய அளவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பதுடன் நம் இந்திய திரையுலகை வெளிநாடுகளில் எல்லாம் பறைசாற்றும் முகமாகவும் இருக்கிறார். குறிப்பாக இங்கே தமிழகத்திலிருந்து வெளிநாட்டில் படங்கள் திரையிடப்பட்டது என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் வெளியாக ஆரம்பித்த பின்னர்தான்.
அந்த வகையில் வெளி மாநிலங்களில் மட்டும் அல்லாது வெளிநாடுகளிலும் அரசியல் ரீதியாகவும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப்பெரிய செல்வாக்கு உண்டு. சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அதிபர்கள், அமைச்சர்கள் இங்கே தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் சூப்பர்ஸ்டார் ரஜினியை நேரில் சென்று சந்திப்பது வழக்கமாகவே நடைபெற்று வருகிறது,
இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சமீபத்தில் லால் சலாம் படத்தின் டப்பிங் பணியையும் முடித்து விட்டார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். இதனை அடுத்து தற்போது அவர் மலேசியா பயணம் மேற்கொண்டுள்ளார்.
ரஜினிகாந்தின் மலேசியா வருகையை கேள்விப்பட்டு அங்கே ஹோட்டலில் தங்கி இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியை மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம் நேரிலேயே வந்து சந்தித்து சில மணித்துளிகள் உரையாடினார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.
இந்த சந்திப்பு குறித்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூறுகையில், “ஆசிய மற்றும் சர்வதேச கலை உலகில் புகழ்பெற்ற ரஜினியை இன்று சந்தித்தேன்.. களத்திலும் திரையுலகிலும் ரஜினிகாந்த் சிறந்து விளங்க பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பாபா படத்தில் சுஜாதா கூறுவது போல பட்டமும் பதவியும் தானாக தேடி வருவது பாபாவுக்கு தான் என்கிற வசனம் போல எங்கு சென்றாலும் அரசியல் அரங்கில் மரியாதைகள் தேடி வருவது சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மட்டும்தான் என்பது இந்த நிகழ்வின் மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது.