HomeNewsKollywoodமுதன்முறையாக மூன்று வேடங்களில் அசத்தும் கவுண்டமணி 

முதன்முறையாக மூன்று வேடங்களில் அசத்தும் கவுண்டமணி 

எண்பது 90களில்  காமெடி ராஜாவாக வலம் வந்தவர் நடிகர் கவுண்டமணி.  கடந்த 15 வருடங்களாக வயோதிகம் காரணமாக படங்களில் நடிப்பதை  குறைத்துக் கொண்டு  ஓய்வெடுத்து வருகிறார். இடையில் ஒரு சில படங்களில் மட்டும் நட்பு காரணமாக தவிர்க்க முடியாததால் கதையின் நாயகனாக  நடித்தார். அப்போதும் அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில் தற்போது ஒத்த ஓட்டு முத்தையா  என்கிற படத்தில்  கதையின் நாயகனாக நடித்து வருகிறார் கவுண்டமணி. சாய் ராஜகோபால்  இயக்கும் இந்த படத்தில் முதன்முறையாக மூன்று வேடங்களில்  நடிக்கிறார் கவுண்டமணி.

இதற்கு முன்னதாக  கண்ணன் வருவான்  உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே  இரட்டை வேடங்களில் நடித்திருந்தார் கவுண்டமணி.

மேலும் இந்த படத்தில்  வடிவேலுவின் ஆஸ்தான  நடிகர்களாக வளம் வந்த சிங்கமுத்து, சிசர் மனோகர்  மற்றும் கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர், கவுண்டமணி மூன்று வேடங்களில் நடிப்பதால் நிச்சயம் காமெடிக்கு பஞ்சம் இருக்காது என  எதிர்பார்க்கலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments