HomeNewsKollywoodஜெயிலரின் அதிரடி வசூல் ; தேடி வந்து மரியாதை செய்த கலாநிதி மாறன்

ஜெயிலரின் அதிரடி வசூல் ; தேடி வந்து மரியாதை செய்த கலாநிதி மாறன்

ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியான நாளிலிருந்து தமிழக மட்டுமல்லாது இந்தியா மற்றும் வெளிநாடுகள் என ஒவ்வொரு  ஏரியாவிலும் ஏற்கனவே முந்தைய படங்கள் செய்து வைத்திருந்த சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி இந்த படத்தின் வசூல் சுமார் 600 கோடியை  தாண்டி உள்ளது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில்  இந்த படத்தின் தயாரிப்பாளர்  சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நேரில் சந்தித்து இந்த படத்தில் வெற்றியை பகிர்ந்து கொண்டார்.

அதுமட்டுமல்ல இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை காசோலையாக அளித்து  கௌரவப்படுத்தினார்.

இதுநாள் வரை தயாரிப்பாளர்கள் தங்கள் பட ஹீரோக்களுக்கு கார், பைக் உள்ளிட்ட வாகனங்களைத் தான் பரிசாக  வழங்கியிருக்கிறார்கள். கலாநிதி மாறன் போன்ற பிரபல தயாரிப்பாளர்  இப்படி முன்னணி ஹீரோவாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தேடி வந்து  காசோலை வழங்கி இருப்பது  ஆச்சரியமாக நிகழ்வுதான்.  

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments