V4UMEDIA
HomeNewsMollywoodபட வாய்ப்புகள் குறைந்தது ஏன் ? ; துடிக்கும் கரங்கள் விழாவில் விமல் வெளிப்படை பேச்சு

பட வாய்ப்புகள் குறைந்தது ஏன் ? ; துடிக்கும் கரங்கள் விழாவில் விமல் வெளிப்படை பேச்சு

மினிமம் கேரண்டி ஹீரோவாகவும் புதிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்களின் ஆதர்ச நாயகன் ஆகவும் வலம் வருபவர் நடிகர் விமல். ஆனால் சமீப காலமாக அவரது படங்கள் எதுவும் பெரிய அளவில் வெளியாகவில்லை. விலங்கு என்கிற திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. அதே சமயம் வரவேற்பும் பெற்றது. இந்த நிலையில் அவர் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.

40 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் துடிக்கும் கரங்கள். தற்போது ஒடியன் டாக்கீஸ் சார்பில் கே.அண்ணாதுரை தயாரிப்பில் அதே டைட்டிலில் உருவாகி இருக்கும் படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை இயக்குநர் வேலுதாஸ் இயக்கியுள்ளார்

கதாநாயகியாக மிஷா நரங் நடித்துள்ள இப்படத்தில் சதீஷ், சுரேஷ் மேனன், சவுந்தர்ராஜா, இயக்குநர் சண்முகம், சங்கிலி முருகன், பில்லி முரளி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணி சர்மாவின் சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தின்இசை வெளியீட்டு விழா நேற்று (ஆக-23) மாலை சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் நடிகர் விமல் பேசும்போது, “பலரும் ஏன் உங்கள் படம் அடிக்கடி வருவதில்லை என்று கேட்கிறார்கள்.. கடவுள் புண்ணியத்தில் இப்போது நிறைய படங்களில் நடித்து வருகிறேன்.. இனி அடுத்தடுத்து எனது படங்கள் வெளியாகும்.. இப்போது எல்லாம் நிறைய கையெழுத்துக்கள் போடுவதில்லை. அதனால் இனிமேல் எனக்கு படங்கள் நிறைய வரும்.. சினிமாவுக்கு வந்த புதிதில் நம்ம படம் தானே என நீட்டிய இடத்தில் எல்லாம் நம்பி கையெழுத்து போட்டு விட்டேன். ஆனால் அதற்கெல்லாம் பின்னாடி மொத்தமாக சேர்த்து வைத்து கிடைத்தது..

விமல் படங்களே வரவில்லையே, இவரை வைத்து படம் எடுக்கலாமா என்று பலரும் யோசிக்கும் அளவிற்கு கடந்த மூன்று வருடங்கள் ஓடி விட்டன. அந்த சமயத்தில் என்னை நம்பி வந்த படம் தான் இந்த துடிக்கும் கரங்கள். சொல்லப்போனால் லாக்டவுன் சமயத்தில் எனக்கு கைகொடுத்த படமும் கூட. இந்த படத்தில் நடிக்கிறேன் என்கிற தகவல் பரவியதால் தான் எனக்கு ‘விலங்கு’ உள்ளிட்ட இன்னும் சில பட வாய்ப்புகள் தேடி வந்தன.

என் தரப்பில் இருந்து சிறப்பு விருந்தினர்கள் யாரையும் அழைக்கவில்லை. கூப்பிட்டு வரவில்லை என்றால் சங்கடமாகிவிடும். அதற்கும் ஒரு நேரம் வரும். ஆனால் சவுந்தர்ராஜா தனது சார்பில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து வந்து விட்டார். ரோபோ சங்கர் ஒரு பல்கலைக்கழகம். அவரை பார்த்து பல பேர் திருந்தி விட்டார்கள். நானும் கடந்த 45 நாட்களாக திருந்தி விட்டேன்” என்று கூறினார்.

Most Popular

Recent Comments