HomeNewsKollywoodயுவன் - அனிருத் கூட்டணியில் பரம்பொருள் படத்திற்காக வெளியான அடி ஆத்தி

யுவன் – அனிருத் கூட்டணியில் பரம்பொருள் படத்திற்காக வெளியான அடி ஆத்தி

பாடல் முன்னைப் போல இல்லாமல் சமீப காலங்களில் இசையமைப்பாளர்கள் ஒருவருக்கு ஒருவர் எந்த ஈகோவும் இல்லாமல் ஒருவரது படங்களில் இன்னொருவர் பணியாற்றி வருகின்றனர். 

ஒருவரின் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடல் எழுதுவதும் பாடல் பாடுவதும் என இசை உலகில் ஒரு ஆரோக்கியமான நட்பு இளைய தலைமுறை மத்தியில் நிலவி வருகிறது. 

அந்த வகையில் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் நடிகர் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பரம்பொருள் என்கிற படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்

 இதில் அடி ஆத்தி என்கிற பாடலை பாட முடிவு செய்த யுவன் தன்னுடன் அனிருத்தும் இணைந்து பாடினால் பாட்டு சூப்பராக இருக்கும் என நினைத்தார். 

அவரது கோரிக்கைக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் ஒப்புக்கொண்டார் அனிருத். இந்த நிலையில் தற்போது இந்த பாடல் இணையத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து பாடியுள்ள இந்த பாடலை இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார். 

சரத்குமாருடன் அமிதாஸ் பிரதான் காஸ்மிரா பரதேசி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சி அரவிந்த்ராஜ் இயக்கியுள்ளார்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments