V4UMEDIA
HomeNewsKollywoodபகத் பாஸில் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புஷ்பா 2 போஸ்டர் 

பகத் பாஸில் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான புஷ்பா 2 போஸ்டர் 

நடிகர் பகத் பாஸில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை மலையாள சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார். தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம் மூலமாக நுழைந்தாலும் அந்த படம் அவருக்கு பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. 

அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் வெளியான புஷ்பா 2 திரைப்படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் வில்லனாக வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருந்தார். பன்வார் சிங் என்கிற அவரது கதாபாத்திரம் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு இணையாக பேசப்பட்டது. 

அதைத் தொடர்ந்து தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பகத் பாஸில். இந்த இரண்டு படங்களிலும் அவரது நடிப்பு பேசப்பட்டு தென்னிந்திய அளவில் அவரது மார்க்கெட் வேல்யூ உயர்ந்துள்ளது. 

இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் முதல் பாகத்தை விட இன்னும் ஸ்ட்ராங்காக பகத் பாஸில் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாம். 

இந்த நிலையில் பகத் பாஸில் பிறந்த நாளை முன்னிட்டு புஷ்பா 2 படத்தில் அவரது கதாபாத்திர போஸ்டரை வெளியிட்டுள்ளனர். வழக்கம்போல இதிலும் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார் பகத் பாஸில்.

Most Popular

Recent Comments