HomeNewsKollywoodசந்திரமுகி ஒருவரா ? இருவரா ? இசையமைப்பாளர் மரகதமணி வைத்த டுவிஸ்ட் 

சந்திரமுகி ஒருவரா ? இருவரா ? இசையமைப்பாளர் மரகதமணி வைத்த டுவிஸ்ட் 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் சந்திரமுகி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாநாயகன் என்றாலும் படத்தின் டைட்டிலில் பெண் பெயர் தான் இடம் பெற்றுள்ளது. அந்த அளவிற்கு பவர்ஃபுல்லான ஒரு கதாபாத்திரமாக சந்திரமுகி இருந்தது. 

இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படத்தை இயக்கியுள்ளார் பி வாசு. இந்த படத்தில் கங்கனார் ரணவத் கதாநாயகியாக நடித்திருக்கிறார். படத்தில் இவர் தான் சந்திரமுகி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. 

இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தான் இசை அமைத்து வருவது குறித்து ஒரு அப்டேட் தகவலை வெளியிட்டுள்ளார் மரகதமணி. அதில் அவர் கூறும்போது தற்போது சந்திராவுக்கான பின்னணி இசையை வெற்றிகரமாக முடித்துவிட்டு இன்று முதல் முகிக்காக ஆரம்பிக்கிறேன்.. ஷெனாய் ருத்ரேஷ் உங்களது ஆத்மார்த்தமான வாசிப்புக்கு நன்றி” என்று கூறியுள்ளார். சந்திரமுகி படத்தைப் பொறுத்தவரை கங்கா என்கிற பெண்ணிற்குள் சந்திரமுகி என்கிற பெண் நுழைந்து விடுவதாக தான் கதை உருவாகியிருந்தது. இந்த நிலையில் சந்திரமுகியையே இரண்டாகப் பிரித்து சந்திரா, முகி என இசையமைப்பாளர் மரகதமணி குறிப்பிட்டுள்ளதை பார்க்கும்போது இந்த படத்தில் சந்திரமுகி ஒருவரா, இருவரா என்கிற ஒரு புதிய குழப்பத்தை ரசிகர்களிடம் அழகாக ஏற்படுத்தி உள்ளார் இசையமைப்பாளர் மரகதமணி. 

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments