HomeNewsKollywoodஇது ஜெயிலர் வாரம் ; தனுஷ் வாழ்த்து

இது ஜெயிலர் வாரம் ; தனுஷ் வாழ்த்து

தமிழ் சினிமாவில் சரியான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருபவர் நடிகர் தனுஷ். அவர் எவ்வளவு உயரத்துக்கு போனாலும் அடிப்படையில் தான் ஒரு ரஜினி ரசிகர் என்பதை எல்லா இடங்களிலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வெளிப்படுத்தி வருகிறார். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மருமகனாக இருந்த போதும் கூட ரஜினி ரசிகர் என்கிற வகையில் தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்வார்.

அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலாக பிரபலங்கள் அனைவருமே இந்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது சோசியல் மீடியா பக்கத்தில் இந்த படம் குறித்து குறிப்பிடும்போது இது ஜெயிலர் வாரம் என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். தனுஷ் தற்போது நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் வரும் தீபாவளியன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments