HomeNewsKollywoodமீனவ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மீனவர்களை நேரில் சந்தித்த நாக சைதன்யா

மீனவ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மீனவர்களை நேரில் சந்தித்த நாக சைதன்யா

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நடிகர் நாகசைதன்யா. இவரும் கடந்த பல வருடங்களாக தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அதுமட்டுமல்ல சமீபத்தில் நமது தமிழ் இயக்குனர் வெங்கட் பிரபு டைரக்சனில் கஸ்டடி என்கிற படத்தில் நடித்ததன  மூலம் தமிழிலும் தனக்கு ஒரு அடையாளத்தை பதிக்க முயற்சி செய்தார். ஆனால் அந்த படம் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் அடுத்ததாக இவர் புதிய படம் ஒன்றில் மீனவ குடும்பத்தை சேர்ந்தவராக நடிக்க உள்ளார். கார்த்திகேயா 2′ படத்தினை பான் இந்திய அளவில் பிளாக் பஸ்டர் ஹிட்டாக்கிய இயக்குநர் சந்து மொண்டேட்டியின் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தை நடிகர் அல்லு அர்ஜுனின் மேலாளரான பன்னி வாஸ் தயாரிக்கிறார்

படத்தின் முன் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படப்பிடிப்பை இந்த மாதத்தில் தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தின் நாயகனான நாக சைதன்யா, இயக்குநர் சந்து மொண்டேட்டி மற்றும் தயாரிப்பாளர் பன்னி வாஸ் ஆகியோர் விசாகப்பட்டினத்திற்கு வருகை தந்தனர்.

அங்கிருந்து அவர்கள் ஸ்ரீகாகுளம் மாவட்டம் காரா மண்டலத்தில் உள்ள கே. மச்சிலேசம் எனும் கிராமத்திற்கு சென்றனர். அங்குள்ள மீனவர்களையும், மீனவ குடும்பங்களையும் சந்தித்தனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய நாயகன் நாக சைதன்யா, “இந்த கதை மிகவும் உற்சாகமாக இருக்கிறது. மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் உடல் மொழி, மீனவ கிராமங்களின் அமைப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ளவே இங்கு வருகை தந்திருக்கிறோம் என்றார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments