HomeNewsKollywoodஆகஸ்ட் 25ல் வெளியாகும் ஹர்ஹரா

ஆகஸ்ட் 25ல் வெளியாகும் ஹர்ஹரா

தமிழ் திரை உலகில் தொடர்ந்து வெற்றிகரமான படங்களை தயாரித்து வரும் நிறுவனங்களில் ஒன்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். இந்த நிறுவனம் படங்களை தயாரிப்பதுடன் உள்ள கதையம்சம் கொண்ட படங்களை வெளியிட்டு திறமையாளர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர உதவி செய்து வருகிறது. அந்த வகையில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் அடுத்து வெளியிட இருக்கும் படம் ஹர்ஹரா.

தற்காலத்தில் டிஜிட்டல் வசதிகள் எதுவுமே இல்லாத ஒரு மலைக்கிராமத்திற்குச் செல்லும் போஸ்ட்மேன் அங்குப் படும் அவஸ்தையும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையும், பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னணியில் இந்தியாவின் முதல் போஸ்ட்மேன் பற்றிய ஆச்சரிய எபிஸோடும் படத்தில் உள்ளது. இயக்குநர் ராம் அருண் காஸ்ட்ரோ மற்றும் காளி வெங்கட் இப்படத்தில் நாயகர்களாக நடித்துள்ளனர். நாயகியாக கௌதமி நடித்துள்ளார். பிச்சைக்காரன் ராமமூர்த்தி,ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க தேனி அருகில் மலைக் கிராமங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. மனதை மயக்கும் அழகான டிரமாவாக உருவாகியுள்ள “ஹர்காரா” படம், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீட்டில் ஆகஸ்ட் 25 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments