கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்கு இசை அமைத்ததற்காக சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருது பெற்றவர் இசையமைப்பாளர் மரகதமணி என்கிற எம்எம் கீரவாணி.
இவர் தற்போது ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் கொடுத்து ஜென்டில்மேன் 2 படத்திற்கு இசையமைக்கிறார். கடந்த 30 வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தயாரிப்பில் ஷங்கர் அறிமுக இயக்குனராக இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜென்டில்மேன்.
தற்போது முற்றிலும் புதிய நடிகர்கள், புதிய இயக்குனர் என இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் பாடல் கம்போசிங் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற போள்காட்டி பேலஸில் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது கேரளா வருகை வந்துள்ளார்கள் இசையமைப்பாளர் கீரவாணியும் கவிஞர் வைரமுத்துவும்.
இந்த இரண்டு மேதைகளுடன் இதன் டைரக்டர் A..கோகுல் கிருஷ்ணா பங்குகொள்கிறார். கேரளா வருகை தந்த இவர்களுக்கு தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் மிகப்பெரிய வரவேற்பு அளித்தார்.
இதற்கு முன்னதாக எம்.எம்.கீரவாணி தமிழில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த ‘பாட்டொன்று கேட்டேன்’, சேவகன், வானமே எல்லை, ஜாதிமல்லி உள்ளிட்ட பல படங்கள் மூலம் இவர்கள் இருவரும் இணைந்து ஹிட் பாடல்கள் கொடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.