V4UMEDIA
HomeNewsKollywoodவிடுதலை 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது

விடுதலை 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருந்த விடுதலை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. இந்த படத்தின் கதாநாயகியாக பவானி ஸ்ரீ நடிக்க இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.

சூரி என்கிற நகைச்சுவையின் நடிகர் மறைந்து போய் ஒரு குணச்சித்திர  நடிகராகவே இந்த படத்தில் மாறி இருந்தார். அந்த அளவிற்கு இந்த படத்தை விறுவிறுப்பான கதையோட்டத்துடன் இயக்கியிருந்தார் இயக்குனர் வெற்றிமாறன்.

முதல் பாகத்திற்கு அனைத்து தரப்பினரிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இரண்டாம் பாகத்திற்கான பாதிக்கும் மேற்பட்ட காட்சிகளை ஏற்கனவே வெற்றிமாறன் படமாக்கிவிட்டார். இன்னும் மீதி காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்தன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் விடுதலை படத்தின் படப்பிடிப்பை துவங்கியுள்ளார் வெற்றிமாறன். இதுகுறித்து நடிகர் சூரி வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் குமரேசன் மீண்டும் டியூட்டிக்கு தயாராகிறார் என்று கூறி கான்ஸ்டபிள் குமரேசன் உருவத்திற்கு தான் மீண்டும் மாறுவதை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அதேபோல கதாநாயகி பவானி ஸ்ரீயும் படப்பிடிப்பு தளத்தில் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு விடுதலை படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments