நடிகை சமந்தா தெலுங்கு இளம் வாரிசு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்காண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்து அவரிடம் இருந்து பிரிந்து வாழ்கிறார் சமந்தா.

அதேசமயம் இந்த இரண்டு வருடங்களில் நாகசைதன்யா பற்றி எந்த ஒரு இடத்திலும் சமந்தா பேசவே இல்லை. இந்த சமயத்தில் கடந்த சில மாதங்களாக நாகசைதன்யாவுக்கும் நடிகை சோபிதா துலிபாலாவுக்கும் காதல் மலர்ந்து இருப்பதாகவும் இருவரும் அடிகடி டேட்டிங் சென்று வருகிறார்கள் என்றும் சமீப நாட்களாக சோசியல் மீடியாவில் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தற்போது சமந்தா நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளியாக இருக்கிறது. கடந்த சில நாட்களாக இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் சமந்தா.

அந்தவகையில் பிரபல தெலுங்கு நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் நாகசைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா இருவருக்குமான நெருக்கம் குறித்து சமந்தாவிடம் கேட்கப்பட்டதாகவும் அதற்கு பதில் அளித்த சமந்தா அவர்கள் இருவரது பெயர்களை குறிப்பிடாமல் “யார் யாருடன் டேட்டிங் போகிறார்கள் என்பது குறித்து எல்லாம் நான் கவலைப்படவில்லை என கூறியதாகவும் செய்திகள் வெளியானது.
இந்தநிலையில் நான் ஒருபோதும் இப்படி கூறவே இல்லை என கூறி இந்த வதந்திக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சமந்தா.


























