சல்மான்கான் நடிப்பில் தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் படம் கிஸி கா பாய் கிஸி கி ஜான். இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். முக்கிய நேரங்களில் வெங்கடேஷ், அவருக்கு ஜோடியாக பூமிகா மற்றும் நடிகர் ஜெகபதி பாபு உள்ளிட்ட தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை பர்ஹத் சம்ஜி என்பவர் இயக்கியுள்ளார். கே ஜி எப் புகழ் ரவி பர்சூர் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு பதுக்கமா என்கிற பாடல் வெளியானது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக என்டம்மா என்கிற பாடலை வெளியிட இருக்கிறார்கள். இதுகுறித்த சில நிமிட புரோமோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே கலர் உடை அணிந்த சல்மான்கான் மற்றும் வெங்கடேஷ் இருவரும் ஆடிப்பாடுவதாக உருவாகியுள்ள இந்த பாடலில் அதே உடை அணிந்த இன்னொரு நபரும் ஒரு சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். அது வேறு யாருமல்.. நம்ம ராம்சரண் தான் .

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராம்சரண் தயாரிப்பில் அவரது தந்தை சிரஞ்சீவி நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான காட்பாதர் படத்தில் சிரஞ்சீவியின் நண்பராக முக்கியமான கதாபாத்திரத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சல்மான் கான். இதற்கு நன்றிக்கடனாக தற்போது இந்த படத்தில் இந்தப் பாடலில் மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடனமாடி உள்ளாராம் ராம்சரண்.


























