V4UMEDIA
HomeNewsKollywoodமனோஜ் பாரதி இயக்கும் படத்தின் டைட்டில் மார்கழி திங்கள்

மனோஜ் பாரதி இயக்கும் படத்தின் டைட்டில் மார்கழி திங்கள்

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி தந்தை வழியில் இயக்குனர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்டார். அதற்கு ஏற்ற மாதிரி இயக்குனர் மணிரத்தினத்திடம் பம்பாய் படத்தில் உதவி இயக்குனராகவும் பணியாற்றினார். ஆனால் பாரதிராஜா அவரை தாஜ்மஹால் படம் மூலம் கதாநாயகன் ஆக்கினார்.

ஆனால் மனோஜ் பாரதியால் நடிப்புத்துறையில் பெரிய அளவில் சாதிக்க முடியவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல நடிகன் என்கிற பெயரை பெற்று விட்டார். இந்த நிலையில் அவரது நீண்ட நாள் கனவான டைரக்சன் துறையில் அடி எடுத்து வைத்துள்ளார் மனோஜ் பாரதி.

இயக்குனர் சுசீந்திரன் தனது வெண்ணிலா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கும் படத்தில் தான் மனோஜ் பாரதியை இயக்குனராக அறிமுகப்படுத்துகிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

அது மட்டுமல்ல அவரது தந்தை பாரதிராஜாவும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்திற்கு மார்கழி திங்கள் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மற்றபடி இந்த படத்தில் புது முகங்கள் தான் முதன்மை வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருக்கிறது. தான் இயக்குநர் அவதாரம் எடுக்கும் முதல் படத்திலேயே தனது தந்தையை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..

Most Popular

Recent Comments