V4UMEDIA
HomeNewsKollywoodநெஞ்சுக்கு நீதி படத்தின் வசனகர்த்தாவுக்கு விகடன் விருது

நெஞ்சுக்கு நீதி படத்தின் வசனகர்த்தாவுக்கு விகடன் விருது

கடந்த வருடம் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி இருந்தார். நெஞ்சுக்கு நீதி என்பது மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் எழுதிய அவரது சுயசரிதை புத்தகத்தின் பெயர். அதன் பெயரிலேயே இந்த படத்தை இயக்கி வெளியிட்டனர்.

இந்த படத்தை அருண்ராஜா இயக்கியிருந்தாலும் இந்த படத்திற்கு தமிழரசன் பச்சமுத்து என்பவர் வசனம் எழுதியிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விகடன் விருது விழாவில் நெஞ்சுக்கு நீதி படத்தில் சிறந்த வசனங்களை எழுதியதற்காக தமிழரசன் பச்சமுத்துவுக்கு சிறந்த வசனகர்த்தா விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை கொண்டாடும் விதமாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகும் “லேபிள்” வெப் சீரிஸின் படப்பிடிப்பில் படக்குழுவனருடன் தனது மகிழ்ச்சியை தமிழரசன் பச்சமுத்து பகிர்ந்து கொண்டார்.

Most Popular

Recent Comments