HomeNewsKollywoodபோர் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் தேவ்

போர் படப்பிடிப்பை நிறைவு செய்த நடிகர் தேவ்

விவேக் நடித்த வெள்ளைப்பூக்கள் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நடிகர் தேவ். தற்போது போர் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தமிழ் ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் ஹிந்தியில் டாங்கே என்கிற பெயரில் உருவாகியுள்ளது.

தமிழில் விக்ரம் ஜீவா இருவரும் இணைந்து நடித்த டேவிட் என்கிற படத்தை இயக்கிய இயக்குனர் பிஜாய் நம்பியார் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகர்களாக காளிதாஸ் ஜெயராம் மற்றும் கைதி, மாஸ்டர் புகழ் அர்ஜுன் தாஸ் இருவரும் நடித்துள்ளனர்.

இதன் இந்தி பதிப்பாக உருவாகும் டாங்கே படத்தில் இதே கதாபாத்திரங்களில் ஹர்ஷவர்தன் ராணே மற்றும் ஈஹான் பட் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த நிலையில் மும்பையில் நடைபெற்று வந்த போர் படப்பிடிப்பில் தொடர்ந்து நடித்து வந்த நடிகர் தேவ் தற்போது தனது படப்பிடிப்பை நிறைவு செய்து படக்குழுவினரிடம் இருந்து விடை பெற்றுள்ளார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments