V4UMEDIA
HomeNewsKollywoodசாகுந்தலம் படத்தில் காஷ்யப முனிவராக பாலிவுட் நடிகர் கபீர் பேடி

சாகுந்தலம் படத்தில் காஷ்யப முனிவராக பாலிவுட் நடிகர் கபீர் பேடி

யசோதா படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா மீண்டும் கதையின் நாயகியாக நடித்துள்ள படம் சாகுந்தலம். புராண கால சாகுந்தலம் என்கிற இலக்கியத்தை தழுவி இந்த படம் உருவாகியுள்ளது. தெலுங்கில் கமர்சியல் இயக்குனர் என பெயர் எடுத்த குணசேகர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கதாநாயகனாக மலையாள நடிகர் தேவ் மோகன் நடித்துள்ளார் முக்கிய வேடங்களில் அதிதி பாலன், பிரகாஷ்ராஜ், மோகன்பாபு, மதுபாலா இவர்களுடன் பாலிவுட் நடிகர் கபீர் பேடியும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

இதில் மோகன்பாபு துர்வாச முனிவராக நடிக்க கபீர் பேடி காஷ்யப முனிவராக நடித்துள்ளார். இந்த புராண காவியத்தின் திருப்புமுனையான பாத்திரங்களில் ஒன்றுதான் காஷ்யப முனிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Most Popular

Recent Comments