மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’. சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த படம் கிட்டத்தட்ட 50 கோடிகளுக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய லாபம் ஈட்டியது.

ஒரு நடுத்தர கிராமத்தில் ஓரளவு படித்த பெண் தனது புகுந்த வீட்டில் பிற்போக்கு குணம் கொண்ட கணவனை எப்படி சமாளித்து தனது லட்சியத்தை அடைகிறார் என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியிலும் அதேசமயம் பெண்களுக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும் படமாக்கி இருந்தார்கள். இதனாலேயே இந்த படம் பெண்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகப்போகிறது என ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தை பாலிவுட் நடிகர் ஆமீர்கான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க இருக்கிறாராம்.
தங்கல் படத்தில் அவரது மூத்த மகளாக நடித்த பாத்திமா சனா ஷேக் என்பவர்தான் இதில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாராம். மலையாளத்தில் இந்த படத்தை இயக்கிய விபின் தாஸ் தான் இந்தியிலும் இந்த படத்தை இயக்க உள்ளார் என தெரிகிறது.

அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை பாத்திமா சனா ஷேக்குடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார் விபின் தாஸ்