HomeNewsKollywoodசிம்ரனின் 50வது படம் என்கிற பெருமையை தட்டிச்சென்ற 'சப்தம்'

சிம்ரனின் 50வது படம் என்கிற பெருமையை தட்டிச்சென்ற ‘சப்தம்’

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தொடர்ந்து பல வருடங்கள் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். வெறுமனே கதாநாயகர்களுடன் டூயட் பாடிவிட்டுச் செல்லும் கதாபாத்திரங்களில் மட்டும் நடிக்காமல் கதைக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களிலும், கதையின் நாயகியாகவும் பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் அவ்வப்போது செலக்டிவான படங்களில் நடித்தும் வருகிறார் சிம்ரன்.

கடந்த வருடம் மாதவனுடன் இவர் இணைந்து நடித்த ராக்கெட்ரி திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் பேசப்பட்டது.

அந்த வகையில் இதுவரை 49 படங்களை முடித்துவிட்ட சிம்ரன் தற்போது அவரது ஐம்பதாவது படமாக இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகும் சப்தம் படத்தில் இணைந்துள்ளார்.

ஈரம் படத்தின் மூலம் நடிகர் ஆதிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்த இயக்குனர் அறிவழகன் மீண்டும் இந்த படத்தில் ஆதியுடன் இணைந்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.

அது மட்டுமல்ல சிம்ரனுக்கு சமகால போட்டியாளராக கருதப்பட்ட நடிகை லைலாவும் இந்த படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments