HomeNewsKollywood118 கோடி வசூலித்த வாத்தி

118 கோடி வசூலித்த வாத்தி

தனுஷ் முதன்முறையாக ஒரு தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடித்து, கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியான படம் வாத்தி. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்த இந்த படம் அங்கே சார் என்கிற பெயரில் வெளியானது.

இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக, நடிக்க சமுத்திரக்கனி முக்கிய காலத்தில் நடித்திருந்தார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

படம் வெளியாகி சரியாக ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் உலகெங்கிலும் சேர்த்து இந்த படம் 118 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமான தகவல் ஒன்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் சூப்பர் ஹிட் வெற்றி படமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து தற்போது வாத்தி படமும் வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு திருப்திகரமான படமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments