HomeNewsKollywoodவாத்தி பட ஒன் லைஃப் முழு வீடியோ பாடல் வெளியானது

வாத்தி பட ஒன் லைஃப் முழு வீடியோ பாடல் வெளியானது

தனுஷ் நடிப்பில் தெலுங்கு, தமிழ் என இரு மொழியில் உருவான வாத்தி திரைப்படம் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி வெளியானது. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியிருந்த இந்த படத்தில் சம்யுக்தா, கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

படம் வெளியாவதற்கு முன்பே பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. குறிப்பாக அடியாத்தி இது என்ன ஃபீலு என்கிற வா வாத்தி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.

படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 நாட்கள் கடந்த நிலையில் சமீபத்தில் வா வாத்தி பாடலின் முழு வீடியோ வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு மிக முக்கியமான பாடலான ஒன் லைஃப் என்கிற பாடல் வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.

இது கிராமத்தில் பள்ளிக்கு செல்லாமல் பல காரணங்களால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த மாணவர்களை தனுஷ் ஒன்றிணைத்து பள்ளிக்கு வரவழைக்கும் ஒரு உத்வேக பாடலாக அமைந்திருந்தது.

தற்போது இந்த பாடல் வீடியோ வெளியாகி ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்டு வருகிறது

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments