HomeNewsKollywoodஇரட்டை அர்த்த வசனம் கொண்ட ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன் ; சிவா உறுதி

இரட்டை அர்த்த வசனம் கொண்ட ஆபாச படங்களில் நடிக்க மாட்டேன் ; சிவா உறுதி

நகைச்சுவை படங்களில் கதாநாயகனாக நடிப்பதன் மூலமே தனக்கென ஒரு தனியான ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் மிர்ச்சி சிவா. விஜய், அஜித் சூர்யாவுக்கு என தனித்தனி ரசிகர்கள் இருந்தாலும் எல்லா ரசிகர்களுக்கும் இவரது படங்கள் நிச்சயமாக பிடிக்கும்.

அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் போன் சிம்ரனும் என்கிற படம் இந்த வாரம் வெளியாகிறது. விஜய் டிவி புகழ் மாகாபா ஆனந்த் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்க இந்த படத்தில் கதாநாயகியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். இந்த படத்தை விக்னேஷ் ஷா என்பவர் இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு பாடகர் மனோ இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்

இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய சிவா, “ஆபாசமான, இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட திரைப்படங்களில் ஒருபோதும் நான் நடிக்க மாட்டேன். காரணம் எனக்கான ரசிகர்கள் அனைவருமே குடும்ப உறுப்பினர்கள் தான். அவர்கள் முகம் சுளிக்கும் விதமான படங்களில் நடிக்க மாட்டேன். யு சான்றிதழ் கிடைக்கும் படங்கள் மட்டுமே எனக்கு போதும்” என்று கூறியுள்ளார். அந்த வகையில் சிவாவின் சமூக பொறுப்புணர்வை தாராளமாக நாம் பாராட்டலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments