லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 67வது படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அதுமட்டுமல்ல படத்தின் பூஜையும் நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொண்டவர்களில் அனைவரையும் கவனம் ஈர்த்தவர் ஒரு குட்டி சிறுமி. இந்த படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


ஏற்கனவே விஜய் நடித்த தெறி படத்தில் அவருடன் இணைந்து நடித்த நடிகை மீனாவின் மகளான நைனிகா, மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். இந்த நிலையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஒரு குழந்தை நட்சத்திரம் விஜய் படத்தில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது.




அதே சமயம் இந்த சிறுமி வேறு யாரும் அல்ல தமிழ் சினிமாவில் பல படங்களில் குணசித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் அர்ஜுனனின் மகள் தான். இவரது பெயர் இயல். இவர் சினிமாவில் நடிப்பதற்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்.. ஆனால் தனது தந்தை அர்ஜுனனுடன் இணைந்து இன்ஸ்டாகிராமில் பல ரீல் வீடியோக்களில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.