HomeNewsKollywoodதனுஷின் வாத்தி பட இயக்குனருக்கு இனிதே நடந்த திருமணம்

தனுஷின் வாத்தி பட இயக்குனருக்கு இனிதே நடந்த திருமணம்

நடிகர் தனுஷ் முதன்முறையாக தெலுங்கு திரை உலகில் அடி எடுத்து வைத்து தெலுங்கு இயக்குனரின் இயக்கத்தில் நடித்து வரும் படம் வாத்தி. பிரபல இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தெலுங்கில் இந்த படம் சார் என்கிற டைட்டிலில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இயக்குனர் வெங்கி அட்லூரிக்கும் பூஜா என்பவருக்கும் இன்று ஹைதராபாத்தில் திருமணம் விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.இவர் வெங்கி அட்லூரி டைரக்சனில் ரங்தே என்கிற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments