HomeNewsKollywoodதளபதி 67 துவக்க விழா பூஜை ; அதிசயங்களும் ஆச்சரியங்களும்

தளபதி 67 துவக்க விழா பூஜை ; அதிசயங்களும் ஆச்சரியங்களும்

ஏற்கனவே மாஸ்டர் என்கிற சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த கூட்டணியான விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் அடுத்ததாக உருவாக இருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 3ஆம் தேதி துவங்கப்பட்டு விட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றுள்ளது.

அதற்கு முன்னதாக இந்த படத்தில் நடிக்கும் முக்கிய நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில் அந்த அறிவிப்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத அதே சமயம் இவர் நிச்சயம் நடிக்கிறார் என சொல்லப்பட்ட நடிகை திரிஷா இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதுடன் இந்த பூஜையிலும் கலந்து கொண்டார்.

கில்லி, திருப்பாச்சி, குருவி, ஆதி என நான்கு படங்களில் இதுவரை இணைந்து நடித்துள்ள இந்த ஜோடி திரை உலகில் பொருத்தமான ஜோடி என ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்த நிலையில் 14 வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் இணைந்துள்ளனர் என்பதுடன் இவர்கள் இருவருமே அப்படியே இளமை தோற்றத்துடன் காட்சி அளிக்கின்றனர் என்பதை இந்த பூஜையில் பார்க்க முடிந்தது.

அதேபோல இந்த பூஜையில் சிறப்பு அழைப்பாளர்களாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் புஷ்கர், இன்று நேற்று நாளை இயக்குனர் ரவிக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த படத்தில் ஒரு பெண் குழந்தை நட்சத்திரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. இது குணச்சித்திர நடிகர் ஆன அர்ஜுனன் என்பவரின் மகள் ஆவார்.

மேலும் பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments