தமிழ் சினிமாவில் விளையாட்டுக்களை மையப்படுத்தி அவ்வப்போது படங்கள் வந்தாலும் பெரும்பாலும் கிரிக்கெட்டை மையப்படுத்தி தான் அதிக அளவில் படங்கள் வந்துள்ளன. கிரிக்கெட் விளையாட்டு என்றாலும் அதனை வெவ்வேறு கதையம்சங்களுடன் பலரும் படமாக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தின் சீடரான ஜெயக்குமார் என்பவரும் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி ஒரு புதிய படத்தை இயக்கியுள்ளார்.


இந்த படத்தில் கதாநாயகர்களாக அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ், பிரித்வி பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர். கதாநாயகியாக கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.


இது குறித்த தகவலை வெளியிட்டுள்ள நடிகர் சாந்தனு இந்த படத்தில் பணியாற்றியது மிகவும் அற்புதமான பயணமாக இருந்தது. உடன் பணியாற்றிய அசோக் செல்வன், பிரித்வி, கீர்த்தி பாண்டியன் மற்றும் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.


விஜய்சேதுபதி நடித்த 96 படத்திற்கு இளைஞர்களின் மனதை கிரங்கடிக்கு பாடல்களை கொடுத்த இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கும் இசையமைத்து வருகிறார். விளையாட்டு பற்றி மட்டுமல்லாமல் அதனூடாக நட்பையும் பற்றி இந்த படம் பேசுகிறது.