HomeNewsKollywoodகிரிமினலுக்காக ஒன்றிணைந்த கௌதம் கார்த்திக் - சரத்குமார்

கிரிமினலுக்காக ஒன்றிணைந்த கௌதம் கார்த்திக் – சரத்குமார்

சமீபத்தில் தான் நடிகை மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொண்டு புது மாப்பிள்ளை ஆக மாறினார் நடிகர் கௌதம் கார்த்திக். அவரது நடிப்பில் ஏற்கனவே சிம்புவுடன் இணைந்து நடித்து வரும் பத்து தல படம் விரைவில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில் கிரிமினல் என்கிற பெயரில் அவர் நடிக்க உள்ள புதிய படம் உருவாக உள்ளது. அறிமுக இயக்குனர் தட்சிண மூர்த்தி ராம்குமார் இந்த படத்தை இயக்குகிறார். இதில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடிக்கிறார் சரத்குமார்.

இன்று சரத்குமார் தமிழில் இந்தியிலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வாரிசு தற்போது தெலுங்கில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கஸ்டடி உள்ளிட்ட படங்களில் அவர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றார். இதைத்தொடர்ந்து இந்த கிரிமினல் படத்திலும் அவர் இதே போன்ற ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மதுரையை பின்னணியாக கொண்டு தீவிரமான க்ரைம் திருளர் கதையாக இது உருவாக இருக்கிறது இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 23 மதுரையில் தொடங்கியுள்ளது மொத்த படத்தையும் 40 நாட்களில் ஒரே கட்டமாக முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் கெளதம் கார்த்திக் அக்யூஸ்ட்டாக நடிக்க காவல்துறை அதிகாரியாக சரத்குமார் நடிக்கிறார்.

பல படங்களில் அவர் ஸ்டைலிஷான காவல்துறை அதிகாரியாக நடித்திருந்தாலும் இதில் தனித்துவமாகவும் புதிதாகவும் பார்வையளர்களுத் தெரிவார் என்கின்றனர் பட குழுவினர் இந்த படத்திற்கு சாம் சி எஸ் இசையமைக்கிறார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments