Home News Kollywood புனித் ராஜ்குமார் நினைவு நாளில் வெளியாகும் கிச்சா சுதீப்பின் கப்ஜா

புனித் ராஜ்குமார் நினைவு நாளில் வெளியாகும் கிச்சா சுதீப்பின் கப்ஜா

கன்னட திரையுலகிலிருந்து ‘கே ஜி எஃப் 1 & 2 ‘, ‘777 சார்லி’, ‘விக்ராந்த் ரோணா’ ‘காந்தாரா’ என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. இங்கு நட்சத்திர நடிகர்களாக ரசிகர்களின் பேராதரவுடன் உலா வரும் நடிகர்கள் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடிக்கும் ‘கப்ஜா’ படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இதில் கதாநாயகியாக ஸ்ரேயா நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே நான் ஈ, பாகுபலி உள்ளிட்ட பிரம்மாண்ட படங்கள் மூலம் வெகு நெருக்கமாக அறிமுகமானவர் நடிகர் கிச்சா சுதீப் கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான விக்ராந்த் ரோனா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த நிலையில் இவரது அடுத்த வெளியீடாக தயாராகியுள்ள கப்ஜா திரைப்படம் வரும் மார்ச் 17ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதில் என்ன சிறப்பு அம்சம் என்றால் கடந்த வருடம் கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் அகால மரணம் அடைந்தார். அதே மார்ச் 17ஆம் தேதி அவரது நினைவை போற்றும் விதமாக இந்த படத்தை வெளியிடுகிறார்கள்.

1947 ஆம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாஃபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் பிரம்மாண்டமான படைப்பு தான் ‘கப்ஜா’. இந்த படத்திற்கு ‘தி ரைஸ் கேங்ஸ்டர் இன் இந்தியா’ எனும் டாக் லைனும் இணைக்கப்பட்டிருக்கிறது.

அதாவது இந்தியாவில் சுதந்திரத்திற்கு பிறகு குற்றச்சம்பவங்களுக்கான சட்டவிரோத நிழல் உலக தாதாக்கள் உதயமான வரலாற்றை இந்த படம் சொல்கிறது