HomeNewsKollywoodதினசரி டயட் சொல்லி ஷாமை அதிர வைத்த விஜய்

தினசரி டயட் சொல்லி ஷாமை அதிர வைத்த விஜய்

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் மட்டும் அவருடன் இணைந்து நடிக்கும் பாக்கியம் பெற்றவர் ஷாம் அதன்பின் தானும் கதாநாயகனாக மாறி கடந்த 20 வருடங்களாக தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் ஷாம். 

இந்த நிலையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் விஜய்யுடன் இணைந்து படம் முழுவதும் வருகின்ற முழு நீள கதாபாத்திரத்தில் அவரது சகோதரராகவே நடித்துள்ளார் ஷாம். 

இந்த படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் குறித்து அவர் பகிர்ந்து கொள்ளும்போது, “படப்பிடிப்பில் எல்லோருக்கும் சம மரியாதை கொடுத்து யாரிடமும் ஈகோ இல்லாமல் பார்த்துக்கொண்டார் விஜய். அது மட்டுமல்ல இன்று பரப்பிடிப்பில் பலர் செய்யும் விஷயம் எப்பொழுதும் செல்போனை வைத்து பேசிக்கொண்டே இருப்பதும் சோசியல் மீடியாவில் ஏதாவது பொழுது போக்கிக்கொண்டு இருப்பதும் தான். ஆனால் விஜய் ஸ்பாட்டிற்கு செல்போன் கொண்டு வரவே மாட்டார். அப்படியே  பேசவேண்டும் என்றால் மதிய உணவு இடைவேளையின்போது மட்டுமே தனது உதவியாளரிடம் இருந்து செல்போனை வாங்கி பேசுவார் விஜய்

அவரிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட பழக்கம் இது. அதை தொடர்ந்து நானும் படப்பிடிப்பில் இதையேதான் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டேன். ஒருமுறை விஜய்யிடம் பேசிக்கொண்டிருக்கும்போது அண்ணா எப்படி உங்கள் வயது நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. அதே உடம்பை எப்படி மெயின்டைன் செய்து வருகிறீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு விஜய் சிரித்துக் கொண்டே எல்லோரையும் போல நானும் பொங்கல், பூரி தான் சாப்பிடுகிறேன். உடற்பயிற்சி எப்போது முடிகிறதோ அப்போது தான் செய்கிறேன் என்று கூறினார்.

எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனாலும் ஒரு சிலருக்கு அவரது அவர்களது உடல்வாகு இறைவன் கொடுத்த வரம். விஜய் சாருக்கும் அப்படி ஒரு வரம் கிடைத்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்” இன்று பிரமிப்பு விலகாமல் கூறுகிறார் ஷாம்

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments