V4UMEDIA
HomeNewsKollywoodசர்தார் தயாரிப்பாளருடன் கைகோர்த்த கொலைகாரன் இயக்குனர்

சர்தார் தயாரிப்பாளருடன் கைகோர்த்த கொலைகாரன் இயக்குனர்

கடந்த வருடம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களில் கார்த்தி நடித்த சர்தார் படமும் ஒன்று. பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் வெளியான இந்த படம் நாட்டிற்காக உளவுத்துறையில் சேர்ந்து பணியாற்றி தங்கள் வாழ்க்கையே தியாகம் செய்யும் வீரர்களை பற்றி உருவாகி இருந்தது. 

இந்த படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்த காரி என்கிற திரைப்படத்தையும் தயாரித்து வெளியிட்டது பிரின்ஸ் பிக்சர்ஸ். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகியிருந்த அந்த படமும் வரவேற்பு பெற்றது.

இதைத் தொடர்ந்து அடுத்ததாக இந்த வருடத்தில் தங்களது புதிய தயாரிப்பை அறிவித்துள்ளது பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம். இந்த புதிய படத்தை இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்குகிறார்.

இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடித்த கொலைகாரன் என்கிற படத்தை இயக்கியவர். அதுமட்டுமல்ல கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஓடிடி தளத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற வெலோனி என்கிற கிரைம் திரில்லர் வெப் சீரிசையும் இயக்கியிருந்தார். அதற்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படி ஒரு வெற்றி கூட்டணி தற்போது புதிய படத்திற்காக இணைந்துள்ளது. படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.

Most Popular

Recent Comments