பொங்கல் பண்டிகை வெளியீடாக அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே அஜித் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய தயாரிப்பாளர் போனி கபூர் இயக்குனர் வினோத் என்கிற வெற்றி கூட்டணியுடன் மூன்றாவதாக இணைந்திருக்கும் படம் இது.


அதனாலேயே இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது. சமீபத்தில் இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்று வருகிறது. கிட்டத்தட்ட 40 மில்லியன் பார்வைகளை தொட்டுள்ள இந்த படத்தின் டிரைலர் இதற்கு முன்னதாக வெளியான அஜித்தின் விஸ்வாசம் டிரைலர் சாதனையை முறியடித்துள்ளது.


இந்த நிலையில் இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். வங்கி கொள்ளையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி இருப்பதாக டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது ஆனாலும் இதைத்தாண்டி படத்தில் வேறு ஏதோ ஒரு விஷயம் இருப்பதும் யூகிக்க முடிகிறது.


இந்த படம் பற்றி ஏற்கனவே இயக்குனர் வினோத் கூறும்போது தன்னுடைய தேவைகளுக்காக எந்த எல்லைகளுக்கும் செல்லக்கூடிய ஒருவனின் கதைதான் இது என்று கூறியுள்ளார் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.