துபாய், அபுதாபி, ஷார்ஜா உள்ளிட்ட ஏழு நகரங்களை ஒன்றிணைத்துள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டில் தங்களது ஆளுகைக்கு உட்பட்ட நகரங்களில் நீண்ட நாட்கள் தங்கி வேலை பார்க்கவும் வசிக்க கோல்டன் விசா வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தின.
இப்படிப்பட்ட ஒரு சிறப்பு சலுகையை ஒவ்வொரு குறிப்பிட்ட துறையில் சாதித்த வெகு சிலருக்கு மட்டுமே வழங்கி வருகிறது ஐக்கிய அரபு அமீரக அரசு.


அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருந்து ஏற்கனவே பார்த்திபன், விஜய்சேதுபதி, குஷ்பு, மீனா உள்ளிட்ட பலர் இந்த கோல்டன் விசா வழங்கி கௌரவிக்கப்பட்டனர் இந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய் இந்த கோல்டன் விசா கௌரவத்தை பெற்றுள்ளார்.


இது குறித்து ஐக்கிய அரபு அமீரகம் அரசாங்கத்திற்கும் ஜேபிஎஸ் குரூப் கம்பெனிகளுக்கும் திரு சாகித் மற்றும் அவரது குழுவினருக்கும் இந்த பெருமையை வழங்கியதற்காக தனது நன்றியை தெரிவித்துள்ளார் இயக்குனர் விஜய்.