நல்ல கதைகளையும் தனக்கு சவாலான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் மிகச்சில நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி சரத்குமார். அந்தவகையில் தற்போது அவர் நடிப்பில் தமிழ். தெலுங்கு. கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் படம் கொன்றால் பாவம்.


இந்த படத்தை இயக்குனர் தயாள் பத்மநாபன் என்பவர் இயக்கியுள்ளார்.


கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப் நடித்துள்ளார். மேலும் இதில் ஈஸ்வரி ராவ், சார்லி, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தை வரும் கோடை விடுமுறை வெளியீடாக வெளியிட திட்டமிட்டுள்ளனர்.


இந்தப் படத்தின் வசனங்களை இயக்குனர் ஜான் மகேந்திரன் எழுதி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.