HomeNewsKollywoodஎதிர்பார்ப்பை எகிற வைக்கும் ராங்கி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ராங்கி படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ

ஒரு படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரிலீசுக்கு முன்னதாக அதிகரிக்க செய்வது படத்தின் டீசர், டிரைலர் மற்றும் ரிலீசுக்கு சற்று முன்னதாக வெளியாகும் ஸ்னீக் பீக் வீடியோக்கள் தான். இவற்றின் மூலம் ரசிகர்களின் பல்ஸ் பிடித்துவிட்டால் தியேட்டருக்கு ரசிகர்கள் தாங்களாகவே வரத்தொடங்கி விடுவார்கள்.

அந்தவகையில் திரிஷா கதாநாயகியாக நடித்துள்ள ராங்கி திரைப்படம் வரும் டிசம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. எங்கேயும் எப்போதும் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை ஓரளவு கவர்ந்த நிலையில், தற்போது இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவில் பத்திரிகையாளரான திரிஷாவை நள்ளிரவு வாகன சோதனையின்போது தடுத்து நிறுத்தும் ஒரு போலீஸ் அதிகாரி, அவரிடம் மிகவும் அநாகரிகமாக பேசுகிறார். திரிஷா பெரிய அளவில் அதற்கு பதிலடி தராமல் திரும்பிச் செல்கிறார்.

அதே சமயம் திரிஷாவின் இருசக்கர வாகனத்தின் முன் பக்க சக்கரத்தில் இதையெல்லாம் பதிவு செய்யும் விதமாக ஒரு கேமரா பொருத்தப்பட்டுள்ளதுடன் இந்த ஸ்னீக் பீக் வீடியோ முடிவடைகிறது.

இதைப் பார்க்கும்போதே அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பு இயல்பாகவே நமக்கு எழுகிறது. நிச்சயம் இந்த ஸ்னீக் பீக் வீடியோ அதிக அளவிலான ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்கும் என எதிர்பார்க்கலாம்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments