V4UMEDIA
HomeNewsKollywoodநாகசைதன்யாவின் கஸ்டடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

நாகசைதன்யாவின் கஸ்டடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் நேரடி தெலுங்கு படங்களில் நடித்து வருகின்றனர். அதேபோல இயக்குனர் ஷங்கர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ராம்சரணை வைத்து படம் இயக்கி வருகிறார். அப்படி இயக்குனர்களும் தெலுங்கிற்கு செல்லும் அந்த வரிசையில் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபுவும் தற்போது நேரடி தெலுங்கு படமாக உருவாகி வரும் கஸ்டடி என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் தெலுங்கு சினிமாவின் இளம் நாயகன் நாகசைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். பிரேம்ஜி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படம் வரும் மே மாதம் 12ஆம் தேதி வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த அறிவிப்பில் என்ன ஒரு புத்திசாலித்தனம் என்றால் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி சரியாக இரண்டு வாரங்கள் கழித்து அதே சம்மர் விடுமுறையில் இந்த படம் வெளியாவதற்கு தனது தேதியை வசதியாக குறித்து வைத்துவிட்டது தான்.

Most Popular

Recent Comments