V4UMEDIA
HomeNewsKollywoodபொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இந்த வருடத்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்துவிட்டது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம். அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அப்படியே அழகான திரைப்படமாக உருவாக்கிய இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக இதை எடுத்திருந்தார்.

கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி இதன் முதல் பாகம் வெளியாகி தமிழகம் மட்டுமல்ல இந்தியாவெங்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. மிகப்பெரிய வசூலையும் இந்த படம் அள்ளியது. இந்த நிலையில் படம் பார்த்த அனைவருமே இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் கேள்வியை தொடர்ந்து எழுப்பி வந்தனர்.

அவர்களுக்கு சந்தோஷம் அளிக்கும் விதமாக தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி இந்தப் படம் ரிலீசாக இருக்கிறது.

சம்மரை குறி வைத்து இந்த படம் ரிலீசாக இருக்கிறது என்பது நன்றாகவே தெரிகிறது. அதுபோன்ற விடுமுறை நாட்களில் தான் மக்கள் குடும்பத்துடன் இந்த படத்தை ரசித்து பார்க்க முடியும் என்பதாலேயே இந்த தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த ஒரு கிளிம்ப்ஸ் வீடியோவுடன் இந்த தகவலை தயாரிப்பு நிறுவனமான லைக்கா அறிவித்துள்ளது.

Most Popular

Recent Comments